வைரல் வீடியோ!! ஜடேஜாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம்!! சினிமாவை மிஞ்சிய கலாச்சார ஜோடி!!

 
ஜடேஜா மனைவி

இந்திyயாவின் முக்கிய நகரங்களில் நடைபெற்ற டி20 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வது முறையாக கோப்பையை வென்றுள்ளது.  ஏற்கனவே ஐபிஎல் சாம்பியனான மும்பை அணியை சென்னை அணி இதன் மூலம் சமன் செய்துள்ளது ரசிகர்களிடையே பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் புள்ளி பட்டியலில் 9வது இடத்தை பிடித்து இருந்த சிஎஸ்கே அணி  இம்முறை  சாம்பியன் பட்டம் வென்று இருப்பது  ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது. ரவீந்திர ஜடேஜா இம்முறை மாபெரும் ஃபைனலில்  15 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார். 2 மாதங்களாக நடைபெற்ற லீக் மற்றும் நாக் அவுட் சுற்றுகளில் மிகமிக சிறப்பாக விளையாடி வந்த நடப்பு சாம்பியன் குஜராத் தங்களுடைய கோட்டையான அகமதாபாத்தில் கோப்பையை தவறவிட்டது.  


டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. குஜராத் அணி  முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 214/4 ரன்கள் குவித்தது.  215 என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி தொடர்ந்து மழையால் 15 ஓவரில் 171 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனால் கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட போது சிக்சரையும் பவுண்டரியும் பறக்க விட்ட ஜடேஜா சூப்பர் ஃபினிஷிங் கொடுத்து வெற்றி பெற வைத்தார். அதன் காரணமாக மோகித் சர்மா 3 விக்கெட் எடுத்தும் குஜராத் கோப்பையை தக்க வைக்கத் தவறியது. அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்த ஜடேஜாவை போட்டியின் முடிவில் கேப்டன் தோனி தனது இடுப்பில் தூக்கி கட்டிப்பிடித்து கண்களில் நீர்வழிய நெகிழ்ச்சி அடைந்து பாராட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.  அதை விட போட்டி முடிந்ததும் களத்திற்குள் ஓடி வந்த ஜடேஜாவின் மனைவி ரவிபா அவரை கட்டிப்பிடிப்பார் என மீடியாக்கள் எதிர்பார்த்த நிலையில்  அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.


குறிப்பாக குஜராத்தில் ஒரு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஜடேஜா மனைவி.  அவர் எம்எல்ஏ என்பதை தாண்டி பல ஆயிரம் ரசிகர்கள் இருந்த மிகப்பெரிய மைதானத்தில் யார் என்ன நினைப்பார்கள் என்பது குறித்து எதுவும் யோசிக்காமல்  கணவருக்கு மரியாதை கொடுத்து மிகச் சிறந்த இந்திய கலாச்சாரத்தை பின்பற்றும் மனைவியாக நடந்து கொண்டது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. - அப்படி தம் மீது அளவு கடந்த மரியாதையும் பாசத்தையும் வைத்திருக்கும் தமது மனைவியை தூக்கிய ஜடேஜாவும் கட்டி பிடித்து அன்பை வெளிப்படுத்தினார். அப்போது இருவரும் சிரித்த முகத்துடன் இருந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மேக்கப் போடாமலேயே கதை எழுதாமலேயே ஐபிஎல் ஃபைனலில் பாலிவுட் திரைப்படத்தை மிஞ்சிய ஒரு உண்மையான காதல், பாசம், அன்பு என அனைத்தும் கலந்த தருணத்தை பார்த்ததாக தெரிவித்தனர்.  

அத்துடன் தம்முடைய மகளையும் கட்டிப்பிடித்து ஜடேஜா காற்றில் தூக்கி கொண்டாடியது “கண்ணான கண்ணே” தமிழ் பாடலின் பிரதிபலிப்பு. மேலும் வெற்றி கோப்பையுடன் ஜடேஜா அருகில் நின்ற போதும் தனது தலையில் சேலையை போர்த்திக் கொண்டு அவருடைய மனைவி சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்தது இந்திய கலாச்சாரத்தை அப்படியே பிரதிபலித்தார்.  நாகரிகம் வளர்ந்துவிட்ட  இந்த காலத்திலும் நிறைய வீரர்களின் மனைவிகள் சேலையுடன் வருவதற்கே யோசிக்கும் நிலையில் ஜடேஜாவின் மனைவி எம்எல்ஏவாக இருந்தும் இந்திய  கலாச்சாரத்தை பின்பற்றுவது  பெரும் வியப்பு என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இறுதியில் ஐபிஎல் கோப்பையை தமது மனைவியிடம் கொடுத்த ஜடேஜா கேப்டன் தோனியுடன் இணைந்து புகைப்படம் எடுத்து ட்விட்டரில்  “இந்த கோப்பை உங்களுக்காக” என தோனிக்கு  அர்ப்பணித்து பதிவிட்டுள்ளார். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web