41 வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் உடல்நிலை கவலைக்கிடம்...!

 
ஜக்ஜித் சிங்

இந்தியாவில் வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் அளிக்கச் செய்யும் வகையில் ஜக்ஜித் சிங் தல்லேவால் தலைமையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய விவசாயத் தலைவரான ஜக்ஜித் சிங் தல்லேவால்  உடல் நிலை மிகவும் மோசமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தொடர்ந்து  41வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அவர், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது வன்முறை


வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் அளிக்க வகை செய்யும் சட்டம் இயற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தங்கள் உரிமைகளைக் காப்பாற்றவும், விவசாயம் குறித்த தீர்மானங்களை மாற்றவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிப்ரவரி மாதம் முதல் பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஜக்ஜித் சிங் தல்லேவால் 2024 ல் நவம்பர் 26ம் தேதி முதல் விவசாயிகளுக்கான உரிமைகளை காக்கும் வகையில்  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
41வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கும் நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்து  சிறுநீரக மற்றும் நுரையீரல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில், 2024 டிசம்பர் 20ம் தேதி உச்ச நீதிமன்றம் அவருக்கு மருத்துவ உதவி வழங்க பஞ்சாப் அரசுக்கு   உத்தரவிட்டது. 

வங்கதேச போராட்டம்


ஜக்ஜித் சிங் தல்லேவாலின் உடல் நிலை மிகவும் கவலைக்குரியதாக இருந்து வரும் நிலையில்  மருத்துவர்கள்  அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வரும் மருத்துவர் அவதார் சிங் தில்லான்   ” கடும் பனி நிலவரம் காரணமாக தல்லேவாலுக்கு உரையாற்ற வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். ஆனால் அவர் அதனை மீறி 11 நிமிடங்கள் உரையாற்றினார். அதன் பிறகு தாகம் காரணமாக  அவர் அவசரமாக கூடாரத்திற்கு அழைத்துவரப்பட்டு, தண்ணீர் தரப்பட்டது. ஆனாலும்  அதனை அவர் ஒத்துக்கொள்ளவில்லை. மேலும், உறங்க முடியாத நிலையில் இருந்த அவர், ரத்த அழுத்தம் 108/73 ஆக குறைந்துவிட்டது. சுவாச விகிதம் 17 ஆகவும், இதயத் துடிப்பு 73 ஆக உள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web