நாளை வாக்கு எண்ணிக்கை... ஜம்மு - காஷ்மீர், ஹரியானாவில் ஆட்சி அமைக்கப் போவது யார்?

 
நாளை வாக்கு எண்ணிக்கை... ஜம்மு - காஷ்மீர், ஹரியானாவில் ஆட்சி அமைக்கப் போவது யார்? 

சமீபத்தில் நடந்து முடிந்த ஜம்மு-காஷ்மீா் மற்றும் ஹரியானா சட்டப்பேரவைத் தோ்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை துவங்க உள்ள நிலையில், ஆட்சி அமைக்கப் போவது யார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. கடந்த செப். 18ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும், செப்.25ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும், அக்.1ம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது. மொத்த வாக்காளா்கள் சுமாா் 88 லட்சம் போ் உள்ள நிலையில், 63. 88 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி அதிகப்படியான இடங்களில் வெற்றிபெறும் வாய்ப்புகள் இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன. 

வாக்கு எண்ணிக்கை

அதேபோல் ஹரியானாவில் 90 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 5ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. சுமாா் 2 கோடி வாக்காளா்களைக் கொண்ட ஹரியானாவில், 67.90 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து இருமுறை வெற்றிப் பெற்று பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இம்முறை ஆட்சி மாற்றம் நிகழும் என்று கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. ஹரியானாவிலும் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளது. 

வாக்கு எண்ணிக்கை

நாளை அக்டோபர் 8ம் தேதி இந்த இரு மாநிலங்களிலும் வாக்குகள் முழுமையாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!