டெல்லி குண்டுவெடிப்பில் ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு தொடர்பு உறுதி... 42 முக்கிய தடயங்களை சேகரித்தது என்ஐஏ!

 
டெல்லி டெல்லி

டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர்; 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காஷ்மீரின் புல்வாமா பகுதியைச் சேர்ந்த மருத்துவர் உமர் முகமது நபி, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை ஓட்டி டெல்லிக்குள் நுழைந்தார். போலீஸ் சோதனையில் சிக்காமல் தப்புவதற்காக கார் இன்ஜின் பகுதியில் வெடிபொருட்களை மறைத்திருந்த அவர், பதட்டத்தில் தற்கொலைத் தாக்குதலை நிகழ்த்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

டெல்லி

அவருடன் தொடர்புடைய ஹரியானா அல் பலா மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். உமர் நபியின் புல்வாமா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அவரது தந்தை குலாம் நபி கைது செய்யப்பட்டு, தாய் மற்றும் சகோதரர்கள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும், உமரின் நண்பர் டாக்டர் சாஜித் மற்றும் அவரது தந்தையும் ஜெய்ஷ் இ முகமது அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

என்ஐஏ அதிகாரிகள் சம்பவ இடத்தில் 42 முக்கிய தடயங்களை சேகரித்து, விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர். உத்தர பிரதேசம், ஹரியானா, காஷ்மீர் உள்ளிட்ட பல இடங்களில் இணைந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

டெல்லி

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம், நிரந்தர உடல் செயலிழப்பு அடைந்தோருக்கு ரூ.5 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.2 லட்சம் என டெல்லி முதல்வர் ரேகா குப்தா அறிவித்துள்ளார்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில், சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. “யாரும் தப்ப முடியாது; குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்,” என அவர் எச்சரித்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!