இன்று ஆவணி அவிட்டம்... திருத்தணி முருகன் கோவிலில் மதியம் நடை அடைப்பு!
இன்று ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் மதியம் நடை அடைப்பு செய்யப்படுகிறது. அதன் பின்னர் இன்று மாலை 3.30 மணிக்கு மேல் கோவில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நண்பகல் 12 மணி முதல் 3.30 மணி வரை நடை அடைக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படாது.

அந்த நேரத்தில் கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் தலைமை குருக்கள் ஆகியோர் பூணூல் மாற்றம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.மாலை 3.30 மணிக்கு மேல் கோவில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
