தூத்துக்குடி: ஜூன் 11ம் தேதி ஜமாபந்தி தொடக்கம்.. பொதுமக்கள் பயன்பெற கலெக்டர் அழைப்பு!

 
லட்சுமிபதி
தூத்துக்குடி மாவட்டத்தில் இம்மாதம் 11ம் தேதி முதல் ஜூன் 18ம் தேதி வரை வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற உள்ளதாகவும், பொதுமக்கள் இதில் பயன்பெறுமாறும் அம்மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் கோ.லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தூத்துக்குடி வட்டத்தில் 1433-ஆம் பசலிக்கான கிராம கணக்குகளை தணிக்கை செய்திடும் வருவாய்த் தீர்வாயம் தூத்துக்குடி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அவர்களால் 11.06.2024 முதல்; தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பிரதி தினம் காலை 10.00 மணி முதல் கீழ்க்கண்ட கிராமங்களுக்கு கீழ்க்கண்ட நாட்களில் நடத்தப்பட உள்ளது.
முதல் நாள் 11.06.2024 செவ்வாய்கிழமை 
1)உமரிக்கோட்டை
2)மேலத்தட்டப்பாறை
3)கீழத்தட்டப்பாறை
4)அல்லிகுளம்
5)மறவன்மடம்
6)செந்திலாம்பண்ணை
7)தெற்கு சிலுக்கன்பட்டி
2-ம் நாள் 12.06.2024 புதன்கிழமை 
1)முத்துசாமிபுரம்
2)வடக்கு சிலுக்கன்பட்டி
3)அய்யனடைப்பு
4)இராமசாமிபுரம்
5)தளவாய்புரம்
6)கூட்டுடன்காடு
7)பேரூரணி

3-ம் நாள் 13.06.2024 வியாழக்கிழமை 
1)திம்மராஜபுரம்
2)வர்த்தகரெட்டிபட்டி
3)இராமநாதபுரம்
4)முடிவைத்தானேந்தல்
5)கட்டாலங்குளம்
6)சேர்வைக்காரன்மடம்
7)குலையன்கரிசல்

4-ஆம் நாள் 14.06.2024 வெள்ளிக்கிழமை 

1)கோரம்பள்ளம் பகுதி-1
2)கோரம்பள்ளம் பகுதி-2
3)குமாரகிரி
4)முள்ளக்காடு பகுதி-1
5)முள்ளக்காடு பகுதி-2
6)மீளவிட்டான் பகுதி-1
7)மீளவிட்டான் பகுதி-2

5-ம் நாள் 18.06.2024 செவ்வாய்க்கிழமை 
1)சங்கரப்பேரி
2)புலிப்பாஞ்சான்குளம்
3)மாப்பிள்ளையூரணி
4)தூத்துக்குடி பகுதி-1
5)தூத்துக்குடி பகுதி-2

பொது மக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு, சம்பந்தப்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட நாட்களில் தங்களது குறைகள் தொடர்பாக மனுக்களை கொடுத்து உரிய தீர்வுகள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web