ஜமைக்கா சூப்பர் மார்க்கெட் துப்பாக்கிச்சூடு.. நெல்லையை சேர்ந்த இளைஞர் உயிரிழந்த சோகம்!

 
விக்னேஷ்

தென் அமெரிக்கா ஜமைக்காவின் பிராவிடன்ஸ் தீவில் உள்ள லீ ஹை ரோட்டில் ஜேகே ஃபுட் என்ற சூப்பர் மார்க்கெட் உள்ளது. இங்கு நெல்லை டவுனை சேர்ந்த விக்னேஷ், சுந்தரபாண்டி, சுடலை மணி, ராஜாமணி ஆகிய நான்கு பேர் வேலை செய்கின்றனர். இந்த பல்பொருள் அங்காடியை சுரண்டையைச் சேர்ந்த சுபாஷ் அமிர்தராஜ் என்பவர் நடத்தி வருகிறார்.

துப்பாக்கி சூடு

இன்று அதிகாலை 1.30 மணியளவில் (ஜமைக்கா நேரப்படி செவ்வாய்கிழமை மாலை 3 மணியளவில்) கொள்ளையர்கள் பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்து பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே விக்னேஷ் பரிதாபமாக இறந்தார்.

மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து விக்னேஷின் உறவினர்கள், இறந்தவரின் உடலை உடனடியாக இந்தியா கொண்டு வர வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web