பிரபல கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தார்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஆண்டசன், டெஸ்ட் கிரிக்கெட் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கடந்த 2002ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் களம் இறங்கிய ஆண்டர்சன் அதனைத் தொடர்ந்து 2003ல் ஜிம்பாப்வேக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அறிமுகமான முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
தற்போது 41 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன், டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் வரிசையில் 3வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் 800 விக்கெட்களுடன் இலங்கையின் முத்தையா முரளிதரனும், 2வது இடத்தில் 708 விக்கெட்டுகளுடன் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னேவும் உள்ளனர்.
'20 ஆண்டுகளுக்கு மேலாக எனது நாட்டிற்காக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறு வயது முதலே இந்த விளையாட்டை நான் நேசித்து இருக்கிறேன். இங்கிலாந்து அணியில் இருந்து வெளியேறுவது கடினமாக உள்ளது. ஆனால் இது சரியான நேரம் என நான் கருதுகிறேன்’ என்று அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!