ஜனவரி 9.... ஜனநாயகன் திரைப்படத்துடன் மோதப்போவது யார்?

 
ஜனநாயகன்

 
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவர்  தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தீவிர அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர்  விஜய் நடிக்கும் கடைசி படம் இதுதான் எனக்  கூறப்படுகிறது. இதனால் படத்துக்கு சினிமா தாண்டி அரசியல் களத்திலும் மிகுந்த  எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.  வழக்கமான விஜய் படம் போன்று இல்லாமல், இந்த படத்தில் அரசியல் நெடி அதிகம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இத்துடன் ஜனநாயகன் படத்தில் பஞ்ச் வசனங்களுக்கும் குறைவில்லையாம்.  விஜய்யின் கட்சி மற்றும் கட்சிக்கொடி பற்றிய சில காட்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.  விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என தற்போது  அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஜனநாயகன்
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் மற்றும் பாசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருகிறதாக கூறப்படுகிறது. இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் இலங்கையில் நடைபெற்று நிறைவடைந்தது.  அடுத்தகட்ட படப்பிடிப்பு பணிகள் பொள்ளாச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது.  

ஜனநாயகன்
இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையில் ‘ஜனநாயகன்’ படத்துடன் ‘பராசக்தி’ மோத இருப்பதாக  ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.   ‘ஜனநாயகன்’ படத்துடன் ‘பராசக்தி’ மோதுகிறதா என்ற கேள்விக்கு இயக்குநர் சுதா கொங்கரா  “இதுகுறித்து எனக்கு தெரியாது. அதை தயாரிப்பாளர் தான் சொல்ல வேண்டும்” என்றார். மேலும் சூர்யாவின் ‘கருப்பு’ படம் திரைக்கு வரவுள்ளது. ‘கருப்பு’ படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.‘ஜனநாயகன்’ படத்துடன் மோதுவது ‘பராசக்தி’ படமா ‘கருப்பு’ படமா என்பது விரைவில் தெரியவரும்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?