ச்சோ க்யூட்... இந்தியாவின் முதல் Gen Beta தலைமுறை குழந்தை!

 
ஜென் பீட்டா

இந்தியாவின் முதல் ஜென் பீட்டா தலைமுறை குழந்தை தென் கிழக்கு மாநிலமான மிசோரமில்  ஜனவரி 1, 2025 அன்று அதிகாலை 12:03 மணிக்கு ஐஸ்வாலின் டர்ட்லாங்கில் உள்ள சினோட் மருத்துவமனையில் இந்தியாவின்  முதல் ஜென் பீட்டா குழந்தை பிறந்துள்ளது.

பிறக்கும் போது சுமார் 3.12 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக பிறந்த 2025ல் இந்தியாவில் முதன்முதலில் பிறந்த இந்த ஆண் குழந்தை தான் ஒரு புதிய தலைமுறை சகாப்தத்தின் தொடக்கமாகும்.

ஜென் பீட்டா

இந்த ஆண் குழந்தைக்கு பிரான்கி எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆண் குழந்தை பிறக்கும் போது 3.12 கிலோ எடையிருந்ததாகவும், எந்த சிக்கலும் இல்லாமல் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் சினோட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. முதல் ஜென் பீட்டா குழந்தை பிரான்கி பிறந்ததில் அவரது மூத்த சகோதரி, தாய் ராம்சிர்மாவி மற்றும் தந்தை ரெம்ருத்சங்கா உற்சாகத்தில் திளைக்கின்றனர்.  

இந்த குடும்பம் ஐஸ்வாலில் உள்ள கிழக்கு கட்லா பகுதியில் வசித்து வருகிறது. "ஜென் பீட்டா" என்ற சொல் மார்க் மெக்ரிண்டில் என்ற அறிஞரால் 2025 மற்றும் 2039 க்கு இடையில் பிறந்த குழந்தைகளை விவரிக்க உருவாக்கப்பட்டது.

ஜென் பீட்டா

1981 முதல் 1996 வரை மில்லினியல்கள் எனவும்,  1996 முதல் 2010  வரை பிறந்தவர்கள் Gen Z என்றும் 2010 முதல் 2024 க்கு இடையில் பிறந்தவர்கள் Gen Alpha ஆல்பா எனவும் அழைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த புத்தாண்டுடன் இந்த லிஸ்டில் பீட்டா தலைமுறை சேர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 2025 முதல் 2039 வரை பிறப்பவர்கள் ஜென் பீட்டா என அழைக்கப்படுவர்

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 

From around the web