ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் மனைவி அனிதா கோயல் காலமானார்... இன்று மாலை இறுதிச்சடங்கு!

 
அனிதா கோயல்

 ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி நிதா கோயல் மும்பையில் உள்ள மருத்துவமனையில் இன்று மே 16ம் தேதி வியாழக்கிழமை காலை காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்  நீண்ட காலமாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார்.   மனைவியின் உடல் நலக்குறைபாடு காரணமாக நரேஷ் கோயல் இடைக்கால ஜாமீன் பெற்று மனைவியுடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து வெளியான தகவலின் படி  அனிதா கோயல் அதிகாலை 3 மணிக்கு  காலமானதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.  

 அனிதா கோயல்

இவருடைய இறுதிச்சடங்குகள் இன்று மாலை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நரேஷ் கோயலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.  மே 3 அன்று, நரேஷ் கோயலின் வழக்கறிஞர் பாம்பே உயர் நீதிமன்றத்தில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் மருத்துவ ஜாமீன் கோரினார்.  ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம், மே 6 வரை கோயல் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனியார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படக் கூடாது என உத்தரவு பிறப்பித்திருந்தது.   உடல் நலக் குறைபாடு காரணமாக  நரேஷ் கோயலுக்கு மும்பை உயர் நீதிமன்றம் 2 மாதங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.பிப்ரவரியில் ஜாமீன் மறுத்த  சிறப்பு நீதிமன்றம் அவர் விரும்பிய தனியார் மருத்துவமனையில்  மருத்துவ சிகிச்சை பெற அனுமதித்தது.

 அனிதா கோயல்

பின்னர், தகுதி அடிப்படையில் இடைக்கால ஜாமீன் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக விடுவிக்கக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கனரா வங்கி வழங்கிய ரூ.538.62 கோடி கடனை மோசடி செய்ததாகக் கூறி, நரேஷ் கோயலை 2023 செப்டம்பரில் அமலாக்க இயக்குனரகம் கைது செய்தது. அவரது மனைவி அனிதா கோயல் நவம்பர் 2023 ல் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை விசாரணை நிறுவனம் சமர்ப்பித்தபோது கைது செய்யப்பட்டார். அவரது வயது மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு அதே நாளில் சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web