கூட்டுறவு நகர வங்கியில் வைத்திருந்த 23.1/2 சவரன் நகை மாயம்.. கதறும் பெண் வாடிக்கையாளர்!

 
 ஜோலார்பேட்டை கூட்டுறவு நகர வங்கி

திருப்பத்தூரை அடுத்த ஜோலார்பேட்டை பகுதியில் ஜோலார்பேட்டை கூட்டுறவு நகர வங்கி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒரு மாதத்திற்கு முன் ஜோலார்பேட்டை பாபு நகர் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரது மனைவி சரண்யா (54) என்பவர்  74வது  ஒரு பெட்டியில் 7 சவரன் தங்க ஆபரணங்களையும்,மற்றொரு பெட்டியில் 23.1/2 சவரன் தங்க ஆபரணங்களையும் வைத்து லாக் செய்துள்ளார். ஜோலார்பேட்டை கூட்டுறவு நகர வங்கியின் பாதுகாப்பு வைப்பு பெட்டியில், இரண்டு பெட்டிகளில் மொத்தம் 30.1/2 சவரன் தங்க ஆபரணங்கள் இருந்தன.

இன்று மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை! ஆர்வத்துடன் நகை வாங்கக் கிளம்பிய பெண்கள்!

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் ஜோலார்பேட்டை கூட்டுறவு நகர வங்கியில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆபரணங்களை எடுத்து செல்ல சரண்யா வந்துள்ளார். அப்போது, ​​அவரது பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பெட்டிகளில், ஏழு சவரன் தங்க ஆபரணங்கள் அடங்கிய பெட்டி மட்டும் கிடந்தது. 23.1/2 சவரன் தங்க ஆபரணங்கள் இருந்த பெட்டியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சர்ண்யா, உடனடியாக இது குறித்து வங்கி மேலாளர் திருஞானசம்பந்திடம் கேட்டுள்ளார். இதற்கு வங்கி மேலாளர், தனக்கு தெரியாது என அலட்சியமாக பதிலளித்தார். இதனால் வங்கி மேலாளருக்கும் சரண்யாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதன்பின், வங்கியின் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போயின. அதை மீட்டு தருமாறு சரண்யா ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், தங்க நகைகளை வீட்டில் வைத்திருந்தால் கொள்ளையர்கள் கொள்ளையடித்துவிடுவார்கள் என பயந்து வங்கியில் உள்ள பெட்டகத்தில்  பாதுகாப்பாக இருக்கும் என நினைத்து வங்கி பெட்டகத்தில் வைத்திருந்தார்.  இந்நிலையில், வங்கியின் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 23.1/2 சவரன் தங்க நகைகள் காணாமல் போனது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web