100 கோடி மோசடி... நகைக்கடை உரிமையாளர் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

 
மோசடி

தமிழகத்தில் சேலம் உட்பட பல்வேறு இடங்களில் நகைக்கடை நடத்தி மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள உரிமையாளர் வீட்டை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டனர். அத்துடன்  சாலை மறியலிலும் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் வீராணம் வலசையூரில் வசித்து வந்தவர் சபரிசங்கர். இவர்  தர்மபுரி, நாமக்கல், ஆத்தூர், கரூர், திருச்சி உட்பட 11 இடங்களில் எஸ்.வி.எஸ் என்ற பெயரில் நகைக்கடை வைத்திருந்தார். இதில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்ததால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முதலீடு செய்தனர்.

மோசடி


கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடையை பூட்டி விட்டு நகை, பணத்துடன் தலைமறைவாகி விட்டார். சுமார் ரூ100 கோடி அளவில் மோசடி செய்து விட்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். அதில் மேலாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். உரிமையாளர் சபரிசங்கர் தலைமறைவாக இருந்து வருகிறார். அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  சேலத்திற்கான உத்தரவு நகல் வந்துவிட்டது. இதனையடுத்து அந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை திரட்டும் பணியை போலீசார் தொடங்கியுள்ளனர்.இந்நிலையில் பணம் கட்டி பாதிக்கப்பட்டவர்களில் 50க்கும் மேற்பட்டோர் நேற்று வீராணம் வலசையூரில் உள்ள சபரி சங்கர் வீட்டை முற்றுகையிட்டனர். வலசையூர் பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டு இருந்தனர்.  

ஆன்லைன் மோசடி

இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதித்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.  இதையடுத்து அங்கு விரைந்து வந்த வீராணம் காவல்துறையினர் பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இதனால் சாலை மறியல் கைவிடப்பட்டது. 'புகார் கொடுத்து பல மாதங்கள் ஆன நிலையில், ஏமாற்றிய சபரி சங்கரை இதுவரை கைது செய்யவில்லை. மோசடி செய்த பணத்தை வைத்துக்கொண்டு உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
பணம் கட்டிய நாங்கள் ரோட்டிற்கு வந்து விட்டோம். அவரை கைது செய்ய காவல்துறை அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. மோசடி செய்த பணம் அனைத்தையும் செலவு செய்தபிறகுதான் காவல்துறையினர்  பிடிப்பார்களா? வக்கீல் ஒருவரின் பாதுகாப்பில் தான் இருக்கிறார். உடனடியாக கைது செய்து எங்களது பணத்தை மீட்டுத் தரவேண்டும்' என மறியலில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web