கை நிறைய சம்பளம்.. தேர்வு கிடையாது... ஐ.டி.ஐ., பட்டதாரிகளுக்கு டி.ஆர்.டி.ஓ.வில் வேலை வாய்ப்பு!

 
டிஆர்டிஓ வேலை வாய்ப்பு பாதுகாப்பு ஆராய்ச்சி

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு நல்ல செய்தியை கொடுத்துள்ளது.. இதற்காக, ARDE DRDO கிராஜுவேட் / டிப்ளமோ / ஐடிஐ அப்ரண்டிஸ் (டிஆர்டிஓ ஆட்சேர்ப்பு 2023) பதவிகளுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்களை விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது.

தகுதியான பட்டதாரி, டிப்ளமோ மற்றும் ஐடிஐ சான்றிதழ் பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த பதவிகளுக்கு (டிஆர்டிஓ ஆட்சேர்ப்பு) டிஆர்டிஓவின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான drdo.gov.in யைப் பார்வையிடுவதன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த ஆட்சேர்ப்பு (DRDO பாரதி 2023) செயல்முறையின் கீழ் மொத்தம் 100 பணியிடங்கள் நிரப்பப்படும். இதில், 50 பட்டதாரி பொறியாளர் பயிற்சியாளர்களுக்கும், 25 பேர் டிப்ளமோ அப்ரண்டிஸ்களுக்கும், 25 பேர் ஐடிஐ பயிற்சியாளர்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது. 

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை கவனமாகப் படித்து விண்ணப்பிக்கவும். ஆன்லைன் விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி இன்று மே 20 ம் தேதியும் கடைசி தேதி  மே 30 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பீரங்கி டிஆர்டிஓ வேலை வாய்ப்பு பாதுகாப்பு ஆராய்ச்சி

பணியிடங்களின் விவரங்கள் :

பட்டதாரி பொறியாளர் பயிற்சியில் 50 பணியிடங்கள், டிப்ளமோ அப்ரண்டிஸ் பயிற்ச்சியில் 25 பணியிடங்கள், ஐடிஐ அப்ரண்டிஸ் பயிற்ச்சியில் 25 பணியிடங்கள் ஆக மொத்தம் நூறு பணியிடங்கள்.

கல்வித் தகுதி :

பட்டதாரி பொறியாளர் பயிற்சிக்கு குறைந்தபட்சம் 6.3 CGPA உடன் அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பல்கலைக்கழகம்/ நிறுவனத்திலிருந்து சம்பந்தப்பட்ட துறையில் முதல் வகுப்பு பொறியியல் பட்டம் (முழு நேர படிப்பு) முடித்திருக்கவேண்டும்.

டிஆர்டிஓ வேலை வாய்ப்பு பாதுகாப்பு ஆராய்ச்சி விமானம்

டிப்ளமோ அப்ரெண்டிஸ் :

மாநில தொழில்நுட்பக் கல்வி வாரியம்/அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பல்கலைக்கழகம் (முழு நேரப் படிப்பு) முதல் வகுப்பு டிப்ளமோ இன்ஜினியரிங் சம்பந்தப்பட்ட பாடத்தில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் (SC/ST/PWD விண்ணப்பதாரர்களுக்கு 50 சதவிகிதம் வரை தளர்வு உண்டு

ஐடிஐ அப்ரண்டிஸ்:

மாநில/இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தொடர்புடைய வர்த்தகத்தில் முதல் வகுப்பில் ஐடிஐ (முழு நேர படிப்பு) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web