டிகிரி தேர்வானவர்களுக்கு விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு... உடனே அப்ளை பண்ணுங்க!

 
நாளை முதல் மதுரை துபாய் விமான சேவை!

டிகிரி, பொறியியல் பட்டதாரிகள், பி.இ., தேர்வானவர்களுக்கு விமான நிலையத்தில் வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பதவிகளுக்கான 496 காலி பணியிடங்களுக்கு தகுதியும், திறமையும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பங்களை இன்று நவம்பர் 1ம் தேதி முதல் ஆன்லைனில் டிகிரி தேர்வானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா, ’ஏஏஐ ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்’ பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள பட்டதாரிகள், ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.aai.aero மூலம் இன்று நவம்பர் 1ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 30 ஆகும். பொதுவாக இதுபோன்ற பணிகளுக்கு தமிழகத்தில் இருந்து இளைஞர்கள் அதிகளவில் விண்ணப்பிப்பதில்லை. அதனால், இம்முறை இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்பியுங்கள்.

ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா

வயது வரம்பு:

அதிகபட்ச வயது 27 ஆண்டுகளாக இருக்க வேண்டும்..

விண்ணப்பக் கட்டணம்:

எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ1000.

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் இயற்பியல் மற்றும் கணிதத்துடன், பிஎஸ்சி அறிவியலில் 3 ஆண்டுகளுக்கான முழுநேர படிப்பாக இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதேனும் ஒரு துறையில் முழுநேர பிஇ இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். செமஸ்டர் பாடத்திட்டத்தில் ஏதேனும் ஒன்றில் இயற்பியல் மற்றும் கணிதம் பாடங்களாக இருப்பது அவசியம்.

ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா

தேர்வு நடைமுறை: ஏர் டிராஃபிக் கண்ட்ரோல் - ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பதவிக்கான தேர்வு ஆப்ஜெக்டிவ் வகையிலான வினாக்களை கொண்டிருக்கும். தேர்வும் ஆன்லைன் வாயிலாகவே நடைபெறும். தேர்வில் தவறான விடைகளுக்கு எதிர்மறை (மைனஸ்) மதிப்பெண்கள் கிடையாது.

விண்ணப்ப நடைமுறை: ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். அதற்கு www.aai.aero என்ற தளத்தை அணுகி விண்ணப்பப் படிவத்தை முறைப்படி நிரப்பி சமர்பிக்கலாம். உடன் அவசியமான ஆவணங்களை பதிவேற்றம் செய்து, விண்ணப்பக் கட்டணத்தையும் ஆன்லைன் மூலமாகவே செலுத்தி விடலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 30, 2023.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web