உடனே விண்ணப்பியுங்க... தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 2553 காலிப்பணியிடங்கள்!

 
வேலை வாய்ப்பு
 

தமிழகம் முழுவதும் உள்ள  அரசு மருத்துவமனைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2,553 மருத்துவர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக  அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Assistant Surgeon  பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
கல்வித் தகுதி :  எம்பிபிஎஸ் பட்டம் பெற்று, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது : 37 வயது  (எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி, பிசிஎம் மற்றும் டிஎன்சி பிரிவைச் சேர்ந்தவர்கள் 59 வயது வரை தளர்வு அளிக்கப்பட்டுள்ளது)  மாற்றுத்திறனாளிகள் 47 வயது வரையும்,  முன்னாள் ராணுவத்தினர் 50 வயது வரையும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.  
விண்ணப்பிக்கட்டணம் : எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ 500 விண்ணப்பக் கட்டணம். மற்றவர்களுக்கு ரூ1000  விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்  

மருத்துவர்
இதற்கான விண்ணப்பங்கள்  https://www.mrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கும் செய்து தகுந்த சான்றுகளை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : மே15, 2024 
மாதச் சம்பளம் : ரூ.56,100 முதல் ரூ.1,77,500 ஊதியம் 
கூடுதல் தகவல்களுக்கு https://www.mrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web