52 மாத இடைவெளிக்கு பிறகு ஜோப்ரா ஆர்ச்சர் ... இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து அணி பட்டியல் வெளியீடு!

 
ஜோப்ரா ஆர்ச்சர்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி போட்டியில் கலந்து கொண்டு 5 டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்சில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பர்மிங்காமல் நடந்த 2- வது டெஸ்டில் இந்தியா 336 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதனால் 1-1 என்ற சமநிலை நிலவி வருகிறது.

சுப்மன் கில் ஜெய்ஸ்வால்  இங்கிலாந்து டெஸ்ட்

இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3 வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை ஜூலை 10ம் தேதி தொடங்குகிறது. இந்திய அணியின் அதிரடி இந்த டெஸ்டிலும் நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தை மீண்டும் வீழ்த்தி முன்னிலை பெறும் ஆர்வத்துடன் இந்தியா உள்ளது. கடைசியாக 2021-ம் ஆண்டு லார்ட்சில் வீராட் கோலி தலைமையிலான அணி 151 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இதனால் இந்தியா நம்பிக்கையுடன் விளையாடும். நாளைய டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

சுப்மன் கில் கிரிக்கெட் டெஸ்ட்

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி வீரர்கள் பட்டியல் இதோ : சாக் கிராவ்லே, பென் டக்கெட், ஓல்லி போப், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ட்ஸ், ஜேம் ஸ்மித், கிறிஸ் வோஸ், பிரைடன் கார்சே, ஜோப்ரா ஆர்ச்சர், ஷோயிப் பாஷிர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் 52 மாத இடைவெளிக்கு பிறகு ஜோப்ரா ஆர்ச்சர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?