சாலையில் ஜாலி வாக்கிங் வந்த முதலை... ஷாக் வீடியோ!

 
ரிஷ்யசிருங்கர்

 மகாராஷ்டிரா மாநிலம்  ரத்னகிரி மாவட்டத்தில்  சிப்லுன் கிராமத்தில் வீதியில்  பெரிய முதலை ஒன்று சாதாரணமாக உலா வந்தது. திடீரென முதலை, சாலையில் வந்ததால்  வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து தங்களது வாகனங்களை நிறுத்தி அதனை வீடியோ புகைப்படங்கள் எடுக்கத் தொடங்கினர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முதலை சர்வ சாதாரணமாக சாலையில் நடந்து வந்ததால் அதனை கண்டவர்கள் அச்சம் அடைந்தனர்.

இந்நிலையில் காரில் சென்ற வாகன ஓட்டி ஒருவர் முதலை சாலையில் நடமாடுவதை பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக  கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஆறுகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. ரத்னகிரி மாவட்டம் முதலைகளுக்கு பெயர் பெற்றது. சிப்லுன் கிராமத்தில், பல முதலைகளின் இருப்பிடமான, சிவன் ஆற்றிலிருந்து இந்த முதலை வெளியே வந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.  தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web