நாளை அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் தீர்ப்பு! திமுகவிற்கு அடுத்தடுத்து சங்கடங்கள்!

 
பொன்முடி

தற்பொழுது தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி, 1996 முதல் 2001 வரை போக்குவரத் துத்துறை அமைச்சராக இருந்தார். அப்பொழுது, சைதாப் பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான 3 ஆயிரத்து 630 சதுர அடி நிலத்தை, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, போலி ஆவணங்கள் தயாரித்து மாமியார் சரஸ்வதி பெயரில், பதிவு செய்ததாக, பொன்முடி, அவரது மாமியார் சரஸ்வதி, அப்போதையஅடையாறு சார் பதிவாளர் புருபாபு, கிட்டு என்ற சைதை கிட்டு உள்பட 10பேர் மீது, லஞ்ச ஒழிப்புத்துறையினர்  2003ல் வழக்குப்பதிவு செய்தனர்.

மருத்துவ படிப்புக்கு மாநில அளவில் தேர்வு:  மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி

சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கு நிலுவையில் இருந்த போது, பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, சார் பதிவாளர் புருபாபு, கிட்டு என்ற சைதை கிட்டு ஆகிய மூன்று பேர் இறந்தனர். இதையடுத்து, பொன்முடி உட்பட மற்ற ஏழு பேர் மீதான வழக்கில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜரத்தினம் உட்பட 90க்கும் அதிகமான சாட்சிகள் அரசுத்தரப்பில் விசாரிக்கப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட சான்று ஆவணங்கள் லஞ்ச ஒழிப்புத்துறையால் தாக்கல் செய்யப்பட்டன.

பொன்முடி

வழக்கில் அனைத்து தரப்பு விசாரணையும் நிறைவடைந்த நிலையில், இவ்வழக்கில் நாளை ஜூலை 6ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என, நீதிபதி ஜெயவேல் அறிவித்துள்ளார். ஆக நாளை பிரேக்கிங் நியூஸ்களுக்கு பஞ்சம் இருக்காது விழக்கின் விசாரணை கிட்டத்தட்ட இருபதாண்டுகளாக நீடித்து நாளை தீர்ப்பு வெளியாக இருக்கிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்