ஜூலை 22ம் தேதி பி.இ., கலந்தாய்வு தொடக்கம்!

 
கலந்தாய்வு

தமிழகத்தில் இன்று பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் இன்று  வெளியிட்டுள்ளது. பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் மூலம் மாணவர்கள் அதில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் B.E, B.Tech   படிப்புகளுக்கு ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறும்.  அரசு பள்ளி சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 22 மற்றும் 23  தேதிகளிலும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 25 முதல் 27ம் தேதி வரையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 450 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகியவையும் அடங்கும்.

கலந்தாய்வு

இந்த கல்லூரிகளில் பி.இ., பி டெக் படிப்புகளில் சுமார் 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்நிலையில் ஒற்றை சாளர முறையில் ஆன்லைன் மூலம்  பொது கலந்தாய்வு நடத்தப்படும். அதன்படி பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு இணைய வழி விண்ணப்ப பதிவு மே 6ம் தேதி முடிவடைந்த நிலையில் ஜூன் 11ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டன.

கலந்தாய்வு

பொறியியல் படிப்புகளில் சேர இதுவரை 2 லட்சத்து 53 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். 198,853 பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். ஜூன் 12ம் தேதி சமவாய்ப்பு எண் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஜூன் 13ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக்கல்வி ஆணையரகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளார்.   பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில், தரவரிசைப் பட்டியலை உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web