ஜூன் 21 கடைசி தேதி... 8,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள்! முழு விபரம்!

 
வேலை வாய்ப்பு

வேலை இல்லை என்று இன்னும் சொல்லிக் கொண்டிருக்காமல் தொடர்ந்து இது போன்ற அறிவிப்புகளுக்கு விண்ணப்ப படிவத்தை உடனே அனுப்புங்க. சுமார் 8,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதிகாரி பதவிகளுக்கான ஆள்சேர்ப்பை IBPS RRB மேற்கொண்டுள்ளது. நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், உடனடியாக விண்ணப்பிக்கவும், கடைசி தேதி ஜூன் 21 இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளது. விவரங்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க. 

அதிகாரி பதவி ஸ்கேல்  I, II, III மற்றும் அலுவலக உதவியாளர் (பல்நோக்கு) பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் விண்ணப்பங்களை கோரியுள்ளது.

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் திறனும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், குறிப்பிட்டுள்ள படிவத்தில் கடைசி தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். இப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 21 ஜூன் 2023 ஆகும். இந்த காலியிடங்கள் பிராந்திய கிராமப்புற வங்கிக்கானது.

வேலை வாய்ப்பு

IBPS RRB இன் இந்த பதவிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்காக, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும், அதன் முகவரி https://ibps.in./ ஆன்லைன் அல்லாத வேறு எந்த வழியிலும் செய்யப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்படும். தேதி இன்னும் தெளிவாக இல்லை. சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு அவ்வப்போது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்க்கவும்.

இந்த ஆள்சேர்ப்புக்கு அதிகாரி ஸ்கேல்  I, II, III மற்றும் அலுவலக உதவியாளர் (பல்நோக்கு) ஆகிய 8000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படும். இதற்கு, பொதுப் பிரிவினர் ரூபாய் 850 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், மற்ற பிரிவினர் ரூபாய் 175 கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஐபிபிஎஸ்

விண்ணப்பத்தை சமர்பிக்க, அதிகாரப்பூர்வமான  https://ibps.in./  என்ற இணையதளத்திற்குச் செல்லவும். அதன் பிறகு விண்ணப்பிக்கும் இணைப்பை க்ளிக் செய்யவும். விரிவடையும் புதிய பக்கத்தில் விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டிருக்கும். நன்கு யோசித்து, சரியாக விண்ணப்பபடிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள். 

வின்ணப்பப்படிவத்தில் கொடுத்திருக்கும் தகவல்களுக்கு தேவையான ஆவணங்களை மறக்காமல் பதிவேற்றம் செய்யுங்க.  அதன் பிறகு விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்துங்கள். இறுதியாக படிவத்தை சமர்ப்பித்து எதிர்கால பயன்பாட்டிற்காக பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும். இது எதிர்காலத்தில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web