ஜூன் 21ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை... கலெக்டர் திடீர் உத்தரவு!
தமிழகத்தில் அரசு மற்றும் பொது விடுமுறைகளை தவிர்த்து உள்ளூர் பண்டிகைகளுக்கு உள்ளூர் விடுமுறைகள் அறிவிக்கப்படுவதுண்டு. அந்த வகையில் திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் ஆனித் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு ஜூன் 21ம் தேதி வெள்ளிக்கிழமை நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை நெல்லை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.
அதே நேரத்தில் இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜூன் 29ம் தேதி சனிக்கிழமை முழு வேலை நாளாக செயல்படும் என அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் ஜூன் 21ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் அவசிய பணிகள் காரணமாக அரசு கருவூலம் குறைவான பணியாளர்களை கொண்டு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!