ஜூன் 2ம் தேதி உள்ளூர் விடுமுறை !! கலெக்டர் அதிரடிஅறிவிப்பு!!

 
விடுமுறை

தமிழகத்தில் அரசு விடுமுறை, பொதுவிடுமுறைகளை தவிர்த்து உள்ளூர் பண்டிகைகள், திருவிழாக்களுக்கு உள்ளூர் விடுமுறைஅளிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த விடுமுறையை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பர். பாதுகாப்பு மற்றும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், திருவிழாக்கள் கொண்டாடுதல் இவைகளுக்காக  இந்த விடுமுறைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

விடுமுறை

இந்த நாட்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அரசு அலுவலகங்களை பொறுத்தவரை குறைவான பணியாளர்களை கொண்டு செயல்படும் அரசு கருவூலங்கள், பொதுத்தேர்வு எழுதுபவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. அந்த வகையில் ஜூன் 2ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் வைகாசிவிசாகம் அனுசரிக்கப்பட உள்ளது. இதற்காக அனைத்து முருகன் ஆலயங்களிலும் விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் முருகனின் 2ம் படைவீடான திருச்செந்தூரில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும்.  

திருச்செந்தூர் முருகன்

இந்த திருவிழாவை கண்டுகளிக்க தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் திரள்வர். இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு ஜூன் 2ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்படும். இதற்கு பதிலாக மற்றொரு சனிக்கிழமை முழு வேலைநாளாக செயல்படும் என  கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட அரசு கருவூலங்கள் அவசிய தேவைக்காக  குறைவான ஊழியர்களை கொண்டு செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web