எல்லா பாடத்திலும் ஜஸ்ட் பாஸ்... மகனை கேக் வெட்ட வைத்து கொண்டாடிய பெற்றோர்!

படிப்பு வாழ்க்கைக்கு ரொம்பவே முக்கியம் தான். ஆனா, படிப்பு மட்டுமே வாழ்க்கை கிடையாது. இதை சரியா புரிஞ்சுக்கிறவங்க வாழ்க்கையில தோற்கறதே இல்லை. அப்படி சமீபத்தில் வெளியான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் எல்லா பாடத்திலும் மிக சரியாக ஜஸ்ட் பாஸ் ஆகி, பொதுத்தேர்வில் 500க்கு 185 மதிப்பெண்கள் எடுத்த தங்கள் மகனைக் கேக் வெட்டி கொண்டாடச் செய்துள்ளனர் பெற்றோர்.
ராமநாதபுரம் மாவட்டம் விளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மலைராஜ். இவரது மகன் நவீன்கரன். பரமக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார் நவீன்கரன். பொதுத்தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல் ஆகிய நான்கு பாடங்களில் சரியாக 35 மதிப்பெண்களும், அறிவியல் பாடத்தில் 45 மதிப்பெண்கள் என மொத்தம் 185 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சியடைந்துள்ளார்.
தங்கள் மகன் ஜஸ்ட் பாஸாகி இருக்கிறான் என்று அந்த மாணவனின் பெற்றோர் வருத்தம் அடையவில்லை. அதுவும் ஒரு சாதனைதான் என நினைத்து மகனை கொண்டாடி இருக்கிறார்கள். ப்ளஸ்-1, ப்ளஸ்-2 தேர்வுகளில் இன்னும் நன்றாக படித்து அதிக மதிப்பெண் எடு என உற்சாகப்படுத்தி உள்ளனர்.
பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றதால் அந்த மாணவன் தனது உறவினர்களுடன் கேக் வெட்டி சந்தோசத்தை பகிர்ந்துள்ளார். நான்கு பாடங்களில் ஜஸ்ட் பாஸ் 35 மதிப்பெண்களுடன் 185 மதிப்பெண்கள் எடுத்த இந்த மாணவனின் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் கேக் வெட்டி சந்தோசத்தை பகிரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!