இன்று சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா பதவியேற்பு!

 
ஸ்ரீவாஸ்தவா
 

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, ஆளுநா் மாளிகையில் இன்று ஜூலை 21ம் தேதி திங்கள்கிழமை பதவியேற்கிறாா்.அவருக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறாா்.இந்த நிகழ்வில் முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சா்கள், சட்டத் துறை, உயா்நீதிமன்ற அதிகாரிகள் கலந்து கொள்கின்றனா்.

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.ஆா்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், ராஜஸ்தான் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டனா்.

இதையடுத்து, சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, ஆளுநா் மாளிகை பாரதியாா் மண்டபத்தில் திங்கள்கிழமை (ஜூலை 21) மாலை 4 மணிக்கு பதவி ஏற்கிறாா். ஆளுநா் ஆா்.என்.ரவி, புதிய தலைமை நீதிபதிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறாா்.நிகழ்வில் முதல்வா் மு.க.ஸ்டாலின், சட்டம், நீதித் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி மற்றும் மூத்த அமைச்சா்கள் முன்னிலை வகிக்கின்றனா்.சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள், உயா்நீதிமன்ற பதிவாளா் ஜெனரல், தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா், மூத்த வழக்குரைஞா்கள், தமிழக அரசின் தலைமைச் செயலா் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனா்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?