திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவு... கடம்பூர் ராஜூபேச்சு!
திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.
கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் 2026 தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு பேசுகையில் "நடிகர்கள் பலர் கட்சி ஆரம்பித்தாலும் எம்.ஜி.ஆரை தவிர யாரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது இல்லை.

இன்றைய நிலைக்கு பாஜக மட்டும் தான் நம்முடைய கூட்டணியில் உள்ளது. இன்னும் பல கட்சிகள் கூட்டணிக்கு வரவுள்ளன. சரியான கூட்டணி அமையும். திமுக கூட்டணி உடையும், ஆட்சி, கூட்டணி இருந்தும் தமிழக முதல்வர் தொகுதி வாரியாக வேலை பார்க்கிறார். அவர்கள் இவ்வளவு கீழ இறங்க வேண்டிய அவசியம் இல்லை. அது ஒருபுறம் இருந்தாலும் நம்முடைய கடமை நாம் செய்ய வேண்டும்

விடியா திமுக ஆட்சி வீட்டிற்கு போக வேண்டும் என்று மக்கள் மனதில் நூற்றுக்கு நூறு இருக்கிறது. அதிமுக ஆட்சி, எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சராக வர வேண்டும் என்று சொல்லியாச்சு டெல்லி மத்திய அரசு பச்சைக் கொடி காட்டி, நம்மை விட ஆர்வமாக இருக்கிறார்கள். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக முழு ஆதரவு கொடுக்கின்றனர். பாஜகவும் நம்முடன் முழு ஒத்துழைப்புடன் இருந்து வருகின்றனர் என்றார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
