” கல்கி 2898 ஏ டி ” வைரலாகும் ட்ரைலர்... எகிறும் எதிர்பார்ப்பு!

 
கல்கி

 இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களை கொண்டு பிரம்மாண்டமாக உருவாகும் 'கல்கி 2898 ஏ டி'  திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் ட்ரைலர் வெளியாகியுள்ளது.  
இந்தியா முழுதும் மிகப்பெரிய  எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.  இந்தத் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் உள்ள பிவிஆர் சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது.  படத்தின் தயாரிப்பாளர் அஸ்வினி தத்  'கல்கி 2898 ஏ டி ' படத்தின் ட்ரைலரை  வெளியிட்டார். 


இது குறித்து தயாரிப்பாளர் “ ''இந்தத் திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பிரம்மாண்டமானதாகவும், ஏராளமான பொருட்செலவிலும் அனைத்து தரப்பு ரசிகர்களை கவரும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம்  ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை   வழங்கும். இதற்காக  படக்குழுவினர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து இப்படத்தை கண்டு ரசிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்'' எனப் பேசினார்.   'கல்கி 2898 ஏ டி ' படத்தின் ட்ரைலர் தற்போது வைரலாகி வருகிறது. 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web