கள்ளக்குறிச்சி சாராய உயிரிழப்பு: மேலும் ஒருவர் உயிரிழப்பு; பலிஎண்ணிக்கை 66 ஆக உயர்வு!

 
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்
 


கள்ளக்குறிச்சியில் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. 220 பேர் சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் அரசு மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 60க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

கள்ளக்குறிச்சி

இவர்களில் 90க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 50க்கும் மேற்பட்டோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 
இந்த வழக்கில் இதுவரை 21 பேரைக் கைது செய்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மருத்துவமனை


கடந்த ஜூலை 1ம் தேதி வரை 65 பேர் கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்திருந்தனர். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 8 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிவராமன் (42) என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web