இன்றுடன் சித்திரை திருவிழா நிறைவு... அழகர் மலை வந்தடைந்தார் கள்ளழகர்!

 
அழகர் ஆற்றில் இறங்க தடை! மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி!

மதுரையில் இருந்து புறப்பட்ட கள்ளழகர், அழகர் மலையை வந்தடைந்த நிலையில், இன்றுடன் சித்திரைத் திருவிழா நிறைவடைகிறது. முன்னதாக மதுரை சித்திரை திருவிழாவில் கலந்து கொண்டு, தங்கையின் திருமணத்தை காண கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி  மதுரை புறப்பட்டார். பக்தர்களின் அன்புக்கு இணங்கி தொடர் மண்டகப்படிகள், சாப விமோசனம் நிறைவடைந்து வருவதற்குள் தங்கையின் திருமணமே முடிந்து விடுகிறது. மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்து தொடர் மண்டகப்படிகளில் பக்தர்களுக்கு சேவை சாதித்து அழகர், மீண்டும் அழகர்மலையை வந்தடைந்தார். இன்று உற்சவ சாந்தியுடன் சித்திரை விழா நிறைவு பெறுகிறது.

கள்ளழகர்
அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்  ஏப்ரல் 23ம் தேதி துவங்கியது. அதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அழகர், மதுரை தல்லாகுளம் சேதுபதி மண்டபத்தில் இருந்து பூப்பல்லக்கில் எழுந்தருளி விடிய, விடிய பக்தர்களுக்கு சேவைசாதித்தார். அங்கிருந்து தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்குச் சென்ற அழகர் ஒவ்வொரு மண்டகப்படியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன் பின்னர், மதுரையில் இருந்து புறப்பட்ட அழகர் புதூர், மூன்றுமாவடி வழியாக நேற்று ஏப்ரல் 27ம் தேதி அதிகாலை 3 மணிக்கு அப்பன்திருப்பதியை அடைந்தார்.

கள்ளழகர்

அங்கு பக்தர்களுக்கு தரிசனம் தரும் கள்ளழகர் அங்கிருந்து புறப்பட்டு  கள்ளந்திரியை அடைந்து, அங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சேவை சாதித்து  தொடர் மண்டகப்படிகளில் காட்சி தந்தார். இந்நிலையில், நேற்று காலை 11.30 மணிக்குள் அழகர்மலையை அடைந்தார். அழகர் கோவிலில் பக்தர்கள் மேளதாளம் முழங்க அவரை வரவேற்று திருஷ்டி சுற்றி, கோயில் வளாகத்திற்குள் பக்தர்கள் அழைத்துச் சென்றனர்.  இறு ஏப்ரல் 28ம் தேதி  காலை உற்சவ சாந்தியுடன் சித்திரைத் திருவிழா நிறைவுக்கு வருகிறது.  

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web