கமல்ஹாசன் மாநிலங்களவை எம்.பி.யாக தமிழில் உறுதிமொழி ஏற்று பதவியேற்றார் !
மாநிலங்களவை எம்.பி.யாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்றுக் கொண்ட கமல்ஹாசன் உறுப்பினர் பதவியேற்பு ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார். தமிழில் தனது முதல் குரலை நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் பதிவு செய்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து திமுகவின் சல்மா, சிவலிங்கம் மற்றும் வில்சன் ஆகியோர் அடுத்தடுத்து தமிழ் மொழியில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஆதரவுடன் மக்கள் நீதி மய்யம் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இன்றைய தினம் பாராளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்து தனது பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார். இந்தியனாக தனது கடமையை ஆற்றுவேன் என தெரிவித்துள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உட்பட பலரும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
