கமலா ஹாரிஸ் அதிபரானால் அமெரிக்காவில் குற்றங்கள் அதிகரிக்கும்.. டிரம்ப் குற்றச்சாட்டு!

 
ட்ரம்ப் கமலா ஹாரிஸ்
 

கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் அதிபரானால் நாட்டில் குற்றங்களும், குழப்பங்களும் அதிகரிக்கும் என்று டிரம்ப் குற்றம் சாட்டினார்.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட துணை அதிபர் கமலா ஹாரிஸ் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், விரைவில் அவர் அதிபர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என தெரிகிறது.

பைடன், கமலா ஹாரிஸ்,  டிரம்ப்

இந்நிலையில் அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் பிரசாரம் மேற்கொண்ட டிரம்ப், கமலா ஹாரிசை கடுமையாக தாக்கி பேசினார். பிரசாரத்தில் அவர் பேசியதாவது: தீவிர தாராளவாத கொள்கை கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபரானால் அவர் நம் நாட்டிற்கு குற்றம், குழப்பம் மற்றும் மரணத்தை வழங்குவார். அதே சமயம் நான் அதிபரானால் அமெரிக்காவில் சட்டம், ஒழுங்கு மற்றும் நீதியை மீட்டெடுப்பேன்.
கமலா ஹாரிஸ்

அதிபராகும் முதல் நாளில் பைடன்-ஹாரிஸ் நிர்வாகத்தின் ஒவ்வொரு திறந்த எல்லை கொள்கையையும் முடிவுக்கு கொண்டு வருவேன். நாங்கள் எல்லையை பூட்டுவோம். நாம் நாட்டிற்குள் பயங்கரமான படையெடுப்பை நிறுத்துவோம். கமலா ஹாரிஸ் மாவட்ட வக்கீலாக பணியாற்றி சான் பிரான்சிஸ்கோவை அழித்தார். அவர் அதிபரானால் நம் நாட்டை அழிப்பார்.
அமெரிக்க வரலாற்றில் மிகவும் திறமையற்ற, செல்வாக்கற்ற மற்றும் தீவிர இடதுசாரி துணை அதிபர் என்றால் அது கமலா ஹாரிஸ் தான். அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் தீவிர இடதுசாரி அவர் தான் என்று டிரம்ப் பேசியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி