கமலா ஹாரிஸ் தான் அடுத்த அதிபர்.. முழு ஆதரவை அளிப்பதாக ஒபாமா தீர்மானம்!

 
கமலா ஹாரிஸ் - ஒபாமா

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட ஒபாமா ஆதரவு அளித்துள்ளார்.குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.எனினும், ஜனநாயகக் கட்சி இன்னும் அதிகாரப்பூர்வ வேட்பாளரை அறிவிக்கவில்லை. தற்போதைய அதிபர் பைடன் போட்டியில் இருந்து விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக கமலா ஹாரிஸை நியமிக்க ஜனநாயகக் கட்சியினர் முயற்சித்து வருகின்றனர்.பைடன் போட்டியிலிருந்து வெளியேறிய சில நாட்களில், கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஆவதற்கு போதுமான ஆதரவைப் பெற்றுள்ளார்.


இந்நிலையில் முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கும் கமலா ஹாரிஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் ஒபாமா வெளியிட்டுள்ள பதிவில், "இந்த வார தொடக்கத்தில், மிஷேலும் (மனைவி) நானும் எங்கள் தோழி கமலா ஹாரிஸை தொடர்பு கொண்டோம். அவர் அமெரிக்காவின் சிறந்த ஜனாதிபதியாக வருவார் என்றும், அவருக்கு எங்கள் முழு ஆதரவு இருப்பதாகவும் கூறினோம். நம் நாட்டிற்கு இந்த இக்கட்டான நேரத்தில்,  அடுத்த தேர்தலில் அவர் வெற்றி பெறுவதை உறுதி செய்ய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று பதிவிட்டுருந்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!