நடிகர் சூர்யாவின் நடிப்பு உச்சம்... ” கங்குவா” முதல் விமர்சனம்!

 
கங்குவா


 
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் கங்குவா.  இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.  இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா  இயக்க ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை திஷா பாட்னி நடிக்க, பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகியுள்ளது.  பிரம்மாண்ட பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை காண  ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக்கிடக்கின்றனர். இந்நிலையில், கங்குவா திரைப்படத்தின் முதல் விமர்சனத்தை படத்தை பார்த்துவிட்டு  பாடலாசிரியர் விவேகா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கங்குவா
அந்தப் பதிவில் 'கங்குவா' படம் பார்த்து மெய்சிலிர்த்தேன்! இந்திய சினிமாவின் பெருமை மிகு பிரம்மாண்டம்! இயக்குனர் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறார். சூர்யா சாரின் நடிப்பு உச்சம்" என படம் குறித்து தனது விமர்சனத்தை பதிவிட்டுள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web