காமராஜரின் பிறந்த நாள் விழா... கனிமொழி எம்பி மரியாதை!

 
கனிமொழி
 

தூத்துக்குடியில் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு கனிமொழி எம்.பி., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

கனிமொழி

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாளான இன்று கல்வி வளர்ச்சி நாளாகவும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தூத்துக்குடி வ.உ.சி சந்தையில் அமைந்துள்ள பெருந்தலைவர் கர்மவீரர் காமராசர் திருவுருவச் சிலைக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கனிமொழி

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?