கன்னியாகுமரி : வீட்டின் கதவை உடைத்து 33‍ பவுன் நகைகள் கொள்ளை!

 
திருட்டு நகைகள் கொள்ளை

 கன்னியாகுமரி மாவட்டம், சுனாமி காலனியில் பூட்டியிருந்த வீட்டின்  கதவை  உடைத்து 33 பவுன் தங்க நகைகளை திருடிய மர்ம ஆசாமியைப் போலீசார் தேடி வருகின்றனர். கன்னியாகுமரி சுனாமி காலனியை சேர்ந்தவர் பெல்கியாஸ்(39). இவர் சவுதி அரேபியாவில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீட்டை, அதே பகுதியில் வசித்து வரும் அவரது தம்பி பராமரித்து வருகிறார். அவ்வப்போது வீட்டுக்கு சென்றும் பார்வையிட்டு, பராமரித்து வந்துள்ளார். 

நகை கொள்ளை

இந்நிலையில் நேற்று வழக்கம் போல், அவர் சென்று பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோவில் இருந்த 33 பவுன் நகைகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது. உடனடியாக இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பூட்டிய வீட்டின் கதவை உடைத்து திருடிய மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web