கன்னியாகுமரியில் படகு சேவை நேரம் நீட்டிப்பு... சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் அதிகரித்த வருகையை முன்னிட்டு, படகு சேவை நேரத்தை ஒரு மணி நேரம் கூடுதலாக நீட்டிக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

குகன், பொதிகை, விவேகானந்தா என்கிற மூன்று படகுகள் மூலம் இங்கு தினசரி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சேவை நடைபெறுகிறது. இதற்கான கட்டணமாக சாதாரண பயணிகளுக்கு ரூ.100, மாணவர்களுக்கு ரூ.40, சிறப்புச் சேவைக்கு ரூ.300 வசூலித்து வருகின்றனர்.

சபரிமலை பருவம் ஆரம்பமாக இருப்பதால் கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதையடுத்து, சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று, நவம்பர் 17 முதல் படகு சேவை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை தொடரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், காலை 6.45 மணி முதல் டிக்கெட் வழங்கும் பணியும் தொடங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் எளிதாக சேவையைப் பெறும் வகையில் இந்த ஏற்பாடு பயனுள்ளதாக இருக்கும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
