கன்னியாகுமரி : ரெட் அலர்ட்... நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் கனமழை காரணமாக நாளை ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிக கன மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக தாமதமாக, கடந்த வாரம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தென் தமிழக மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் நவம்பர் 6ம் தேதி வரை கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், நாளை கன முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் “ஆரஞ்ச் அலர்ட்” எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உரிய முன்னேற்பாடுகளை செய்வதற்காக ‘ஆரஞ்ச்’ நிற அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. அதன்படி தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!