“கப்பு எங்களுக்கு தான் பிகிலு...” விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுக!

 
விஜய் பிகிலு

மழை விட்ட பின்பும், மரங்களின் இலைகளில் சாரல் விழுந்து கொண்டிருப்பதைப் போல விஜய்யைச் சுற்றிலும் சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. பட ரிலீஸ் சமயத்தில் பிரச்சனைகளை சந்தித்து, படமும் ஒரு வழியாக ரிலீஸான பின்பும், வசூல் விபரங்களையும், இந்த படம் ‘ஜெயிலர்’ வசூல் கிட்ட கூடப் போகாது என்றும் சொல்லி வந்தார்கள். படத்தின் வெற்றி விழாவில், கப்  முக்கியம் பிகிலு என்று விஜய் பேசியதற்கு ரசிகர்களிடையே பெரும் ஆரவாரம் எழுந்த நிலையில், தற்போது இதற்கு பதில் சொல்லும் விதமாக அதிமுக பிரமுகர் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்.

அடுத்த வருடம் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதிலிருந்து காய் நகர்த்த தொடங்கியுள்ளனர் அரசியல் கட்சிகள். மாநிலத்திலும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்புடன் இருக்கிறது அதிமுக. இந்நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலிலும், 2026 சட்டசபை தேர்தலிலும் கப்பு எங்களுக்கு தான் பிகிலு என்று அதிமுக கட்சி அலுவலகம் முன்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த போஸ்டரில், 2024/26 -ல் ‘கப்பு’ எங்களுக்குதான் பிகிலு... ’ என்று சம்மந்தமில்லாமல் விஜய்யை வம்புக்கிழுத்திருக்கின்றனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வர உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், சென்னையில் நடந்த லியோ திரைப்பட வெற்றி விழாவில் உரையாற்றிய நடிகர் விஜய், 2026 சட்டசபை தேர்தலில் கால்பதிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் 2026ல் கப்பு முக்கியம் பிகிலு, அதனை நீங்கள்தான் பார்த்து கொள்ள வேண்டும் என அவரது ஸ்டைலில் ரசிகர்களை பார்த்து கேட்டுக் கொண்டார். 

நடிகர் விஜய்க்கு பதிலடிக்கும் கொடுக்கும் வகையில் அதிமுகவினர், சுவரொட்டி ஒட்டியுள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகம் முன்பு ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், 2024,2026 தேர்தலில் கப்பு தங்களுக்குதான் பிகிலு... என அதிமுக மருத்துவரணி இணைச்செயலாளர் சரவணன் பெயரில் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கிரிக்கெட் உடையில், தொப்பி அணிந்து கிரிக்கெட் மட்டையை கையில் ஏந்தியவாறு இருக்கிறார்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web