கார்த்திகை ஜோதி தரிசனம்... அமீபா வைரஸ்... சபரிமலை வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
மண்டல பூஜையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வரும் சூழலில், கேரள சுகாதாரத் துறை புதிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டு, பம்பை நதியில் நீராடும் பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துள்ளது. மாநிலத்தில் தற்போது பரவி வரும் ‘அமீபா’ தொடர்பான மூளை நோய் அதிகரித்து வருவதால், பக்தர்கள் ஆரோக்கிய பாதுகாப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரளாவின் சில பகுதிகளில் கண்டறியப்பட்ட அமீபா தொற்று மிக வேகமாகப் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நோய் பொதுவாக நீர்நிலைகளின் மூலம் பரவுவதால், நதியில் நீராடும் பொழுது அமீபா மூக்கின் வழியாக மூளைக்குள் நுழைய வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு, பம்பை நதியில் நீராடும்போது பக்தர்கள் மூக்கை இரண்டு விரல்களால் அடைத்தபடி நீராட வேண்டும் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
நீரில் காணப்படும் நுண்ணுயிரிகள் அல்லது பூச்சிகள் மூக்கின் வழியாக உடலிற்குள் புகுவது தடுக்கும் நோக்கத்தோடு இந்த கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சபரிமலைக்கு வரும் அனைவரும் இதை கடைபிடிக்க வேண்டும் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மண்டல காலத்தில் அதிகமான மக்கள் திரண்டு வருவதால், சுகாதாரத் துறை கூடுதல் மருத்துவப் பணியாளர்கள், அவசர சிகிச்சை வசதிகள், விழிப்புணர்வு அறிவிப்புகள் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பக்தர்கள் தங்கள் உடல் நலனைக் கருத்தில் கொண்டு நதியில் நீராடும் போது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும், சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களை முழுமையாகப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
