ஆறாவது நாளாக அலறும் கரூர்... அள்ள அள்ள பணம்... 7வது நாளாக தொடர்கிறது ரெய்டு!

 
செந்தில்பாலாஜி உதயநிதி

கரூரில் மின்துறை மற்றும் கலால் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் உட்பட்டோர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடங்கிய ரெய்டு 6வது நாளாக நேற்றும் தொடர்ந்த நிலையில் இன்று ஏழாவது நாளாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒப்பந்ததாரர் வீட்டில் நடைப்பெற்ற ரெய்டில் அள்ள அள்ள பணம் சிக்கியுள்ளது. அந்த பணத்திற்கான கணக்கு கேட்கையில், அமைச்சரிடம் தருவதற்காக வைத்திருந்ததாக ஒப்பந்ததாரர் கூறியுள்ளார். இது கணக்கில் வர வேண்டிய வசூல் பணம் என்று பிரேம்குமார் கணக்கு காட்டியிருந்தாலும், அந்த பணம் வசூலிக்கப்பட்டிருக்கிறதா? இல்லை.. கையிருப்பு பணம் சிக்கியதால், இப்படி கணக்கு காட்டுகிறாரா என்கிற கோணத்திலும் வருமான வரித்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், ரெய்டு பணி தொடர்கிறது. 

கரூர் காந்திகிராமத்தில் உள்ள ஒப்பந்ததாரர் பிரேம்குமார் வீட்டில் 6வது நாளாக சோதனை தொடர்ந்தது. கரூர் சின்னஆண்டாங்கோவில் சாலையில் உள்ள ஒரு காம்ப்ளக்சில் உள்ள சங்கர்.ஆனந்தின் அறையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர் கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அசோக்குமாரின் அலுவலகத்திற்குள் சோதனை செய்த வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நாளில் முடித்துக் கொண்டு வெளியேறினர்.

ரெய்டு வருமானவரித்துறை போலீசார்

கரூர் சின்னஆண்டாங்கோவில் சாலையில் உள்ள தனியார் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் 2ம் நாளாக சோதனை நடந்து வருகிறது. கரூர் காந்திகிராமம் வடக்கு இபி காலனியில் உள்ள சங்கர் ஆனந்த் அலுவலகத்தில் பணியாற்றும் ஷோபனா வீட்டில் ஆறாவது நாளாக சோதனை தொடர்கிறது. கரூர் வையாபுரி நகர் நான்காவது குறுக்கு சந்தில் உள்ள ஒரு கட்டடத்தின் 2வது மாடியில் உள்ள ஆடிட்டர் ஒருவரது அலுவலகத் தில் நேற்று சோதனை நடந்தது.  கரூர் சின்னஆண்டாங்கோவில் சாலையில் உள்ள மளிகை மொத்த விற்பனையாளர் தங்கராஜ் வீட்டில் நேற்று காலை முதல் சோதனை நடந்து வருகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் கரூர் சின்னஆண்டாங்கோவில் சாலையில் உள்ள தங்கராஜ் வீடும் உள்ளது.

கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் திருவிழா நடந்து வரும் நிலையில், வருமான வரித்துறையினர் சோதனை, திருவிழாவை கடந்து  இன்று 7வது நாளாக நடத்தி வருகின்றனர் இதனால் சோதனை நடக்கும் பல பகுதிகளில் மத்திய, மாநில போலீசார் அணிவகுப்பையும், அதிகாரிகளின் கார்கள் அணிவகுப்பையும் காண முடிகிறது.

ரெய்டு வருமானவரித்துறை போலீசார்

இதுகுறித்து வருமான வரித்துறையில் நெருக்கமான அதிகாரிகள் சிலர் பேசுவதற்கு தயக்கம் காட்டினாலும் மின்சார அமைச்சர் குரூப் வயர்ல கைய வச்சிருந்தா பரவாயில்லை டிரான்ஸ்பார்மரையே அசைத்து பார்த்ததோடு பெண் அதிகாரி என்றும் பாராமல் தாக்குதல் நடத்தியது தான் இத்தனை ஆக்ரோஷத்துக்கும் காரணம் என்கிறார்கள். திமுகவினரில் சிலரோ அவர் பிரச்சனையை அவர் பார்த்துக் கொள்வார். எங்கள பத்தி மட்டும் கேளுங்க என ஜகா வாங்க ஆரம்பித்துள்ளார்கள். ஆனால் செந்தில் பாலாஜியோ எவ்வித பதட்டமும் இல்லாமல் உள்ளூர் காவல்துறை புடைசூழ வலம் வந்து கொண்டிருக்கிறார். அரசியல்ல இதெல்லாம் சர்வ சாதாரணமய்யா!

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web