கரூர்: 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள்... தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்!

 
கரூர் ஸ்ரீ மகாலட்சுமி கோயில் தேங்காய்

ஆடி மாதம் துவங்கியதில் இருந்தே தமிழகத்தில் அம்மன் கோவில்களில் திருவிழா களைக்கட்ட துவங்கி இருக்கிறது. இந்நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் அமைந்துள்ள சுமார் 400 ஆண்டுகால பழமை வாய்ந்த ஸ்ரீ மகாலட்சுமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18ம் தேதி  அடுத்த நாளான ஆடி 19ம் தேதியன்று பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் வழக்கம்போல, இந்த ஆண்டும் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

கரூர் ஸ்ரீ மகாலட்சுமி கோயில் தேங்காய்

ஆடி மாதம் 1ம் தேதி முதல் விரதம் மேற்கொண்டு 18 நாள்கள் கழித்து, இன்று ஆகஸ்ட்  4ம் தேதி  நடைபெற்ற இந்த நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சிக்காக ஆண்கள், பெண்கள் என 800க்கும் மேற்பட்டோர் காலை 6 மணியில் இருந்து கோயில் முன்பு  காத்திருந்தனர்.

கரூர் ஸ்ரீ மகாலட்சுமி கோயில் தேங்காய்

இன்று காலை 9.10 மணிக்கு  கோயில் பாரம்பரிய பூசாரி, மகாலட்சுமிக்கு அலங்கார அபிஷேகம் செய்த பின்பு, மேளதாளம் முழங்க, ஆணிகள் பொருத்தப்பட்ட பாத அணி மீது நின்றார். அத்துடன்  கொடிக்கம்பம் மீது தீபம் ஏற்றினார்.  இதனைத் தொடர்ந்து பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தார். இதை பக்தி பரவசத்துடன் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டனர்.  இந்நிகழ்ச்சியைக் காண சென்னை, கோவை, திருச்சி, பெங்களூரு, தேனி, மதுரை, கர்நாடகம், கேரளம் உட்பட  பல பகுதியில் இருந்து சுமார் 10,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?