கத்திரி ஆரம்பிச்சாச்சு.. நாளை முதல் 3 டிகிரி வரை வெப்பம் உயரும்... வானிலை ஆய்வு மையம் தகவல்!

 
வெயில் , மழை

தமிழகத்தின் பல  மாவட்டங்களிலும், புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருச்சி, தென் மாவட்டங்கள் என பல்வேறு மாவட்டங்களில் மாலை முதல் இரவு நேரங்களில் கனமழை பெய்கிறது. இதனால், மாநிலம் முழுவதும் இந்த கோடை காலத்திலும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவானது. இந்நிலையில், கோடை வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படும் அக்னி நட்சத்திரம் இன்று மே4ம் தேதி தொடங்கி மே 29ம் தேதி வரை நீடிக்கிறது. இந்த காலக்கட்டத்தில், வங்கக் கடலில் புயல் சின்னமும் உருவாக வாய்ப்புள்ளது என்கிறது வானிலை ஆய்வு மையம்.

வெயில்

இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் 'தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மே 8ம் தேதி, வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது.  இந்த சுழற்சி அதற்கடுத்த 24 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. அதைத் தொடர்ந்து, புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளது. இந்த புயல், தொடர்ந்து, வடக்கு நோக்கி மத்திய வங்கக்கடல் பகுதிக்கு நகரும் இந்த புயல் சின்னம் காரணமாக தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றாலும் கூட மேற்கு வங்கம், ஒடிசா நோக்கி புயல் சின்னம் நகர வாய்ப்பு உள்ளது.

வெயில்

இருப்பினும், தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளது. 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் வடதமிழகத்தின் மேல்,வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மே 7ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை மே 5ம் தேதி முதல் மே 7ம் தேதி வரையில் அதிகபட்ச வெப்ப நிலை 2 முதல் 3 டிகிரி வரையில் படிப்படியாக உயரும்.  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளுக்கு மே 6ம் தேதியும், தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு மே 7ம் தேதியும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web