கத்திரி வெயில் ஆரம்பிச்சுடுச்சு... சுப காரியங்களைச் செய்யலாமா? எதையெல்லாம் தவிர்க்கணும்?

 
தமிழகத்தை வாட்டி வதைக்கும் வெயில்! பொதுமக்கள் அவதி!

இதோ அதோ என்று பயமுறுத்திக் கொண்டிருந்த அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெயில் இன்னைலேயிருந்து ஆரம்பமாகிடுச்சு. ஜோதிடத்தைப் பார்க்கலாம்... முதல்ல இந்த வெயில் காலத்துல உடல் நலத்தைப் பார்த்துக்க நிறைய தண்ணீர் குடிங்க. நீர் சத்துள்ள காய்கறிகளை உணவில் சேர்த்துக்கோங்க. அசைவ வகையான உணவுகளைத் தவிர்த்துடுங்க. இன்று துவங்கி இருக்கும் கத்திரி அடுத்த 25 நாட்கள் வரையில் இருக்கும். இந்த காலங்களில் வெப்பம் 3 டிகிரி வரையில் உயர வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

பொதுவாகவே அக்னி நட்சத்திர நாட்களில் கிரகப் பிரவேசம், கிணறு வெட்டுதல், வீடு கட்டும் பணி தொடங்குவது, வாசற்கால் வைப்பது போன்ற சில மங்களகரமான காரியங்களை தவிர்த்து விட வேண்டும். இந்த ஆண்டு அக்னி நட்சத்திர காலம் குறித்து கோயில் சிவாச்சாரியார் கூறியதாவது... சில ஆண்டுகளாக, அக்னி நட்சத்திர காலத்தில் கடும் வெயில் வாட்டியது. அக்னி காலம் முடிந்தும், கடுமையாக மழை, வெயில் தாக்கம் தொடர்ந்தது.

வெயில்

சோப கிருது ஆண்டுக்கான இடைக்காடர் பாடலில் தேவையான நேரங்களில் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. மேகாதிபதியாக குரு பகவான் இருப்பதால் நல்ல மழைகொடுப்பார். ராஜாவாக இருப்பதால் காற்று அதிகமாக இருக்கும். 

திருமணம் கல்யாணம் கும்பம்

அக்னி நட்சத்திர காலத்தில் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாக, கடற்கரை மாவட்டங்களில் அதிகமாக மழை இருக்க வாய்ப்பு உண்டு. சூறைக் காற்று. வெயில் என அக்னி நட்சத்திர காலம் கழியும். மே 29ம் தேதியுடன் அக்னி நட்சத்திர காலம் நிறைவடைகிறது. இது போன்ற நல்ல காரியங்களைச் செய்ய முடிவு செய்திருப்பவர்கள் அதன் பிறகு நல்ல நாள் பார்த்து செய்யுங்க என சிவாச்சாரியார் தெரிவித்தார்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!