குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்... வைரலாகும் வீடியோ!!

கடந்த மாதம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைநிகழ்ச்சியில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றன. இதனால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பெரும் அவதிப்பட்டனர். இதில் உருவான சர்ச்சை காரணமாக அதன் பிறகு ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது.
Podu Mamey 🕺🏻🥳 pic.twitter.com/mU10DRBzEz
— Ayyappan (@Ayyappan_1504) October 27, 2023
சமீபத்தில் நடந்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசைநிகழ்ச்சிகளுக்கும் ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்தது காவல்துறை.இந்நிகழ்ச்சியில் ரசிகர்கள் மட்டுமல்லாது, பிரபலங்களும் கலந்து கொண்டனர். அதில் ஹாரிஸின் ஆஸ்தான இயக்குநரான கெளதம் மேனனும் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷிடன் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ளார். மேடையில், ஹாரிஸ் ஜெயராஜ் பாடிக் கொண்டே நடனம் ஆட கீழே ரசிகர்களுடன் இணைந்து கெளதமும், கீர்த்தியும் குத்தாட்டம் போட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!