கேரளா நிலச்சரிவு.. முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 20 லட்சம் வழங்கினார் விக்ரம்!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று இரவு மிக கனமழை பெய்தது. கனமழை காரணமாக வயநாடு சூரல்மலை பகுதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 2ம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் மீண்டும் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
வைத்திரி, வேளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகள் அடுத்தடுத்து நிலச்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 200 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் சிக்கி உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், நிலச்சரிவு மீட்பு பணிக்கு நடிகர் விக்ரம் நிவாரணம் வழங்கியுள்ளார். இதற்காக கேரள முதல்வரின் பொது நிவாரண நிதியாக ரூ. 20 லட்சத்தை விக்ரம் கொடுத்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!