கேரள நிலச்சரிவு: கெளதம் அதானி ₹5 கோடி நிவாரணநிதி அறிவிப்பு!

 
அதானி

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு குறித்து பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், இது வரலாறு காணாத வேதனையான பேரிடர் என்றும் கூறினார். அவர் மேலும் கூறுகையில், “இதுவரை 200உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களில் 79 பேர் ஆண்கள். 64 பேர் பெண்கள். பேரிடர் பாதித்த பகுதிகளுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மீட்பு பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

பள்ளி மாணவர்களும் நிவாரண முகாம்களில் தங்கி உதவி வருகின்றனர். நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்டு முகாம்களில் தங்கி சிகிச்சை பெற்று வரும் மக்களுக்கும் உதவி செய்து வருகின்றனர். இதேபோல், பல தன்னார்வலர்களும் முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உணவுப் பொருட்கள், மருந்துகள், உடைகள், அத்தியாவசியப் பொருட்கள் போன்றவற்றை சேகரிக்கும் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. சமூக வலைதளங்களில் அத்தியாவசியப் பொருட்களை சேகரிப்பதில் பல்வேறு தன்னார்வலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கேரள நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி அம்மாநில எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினர். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் கேரளாவுக்கு 5 கோடி ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பலர் தங்களால் இயன்ற தொகையை வழங்கி வருகின்றனர்.


இந்நிலையில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, கேரள மாநிலத்துக்கு உதவும் வகையில் முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி நன்கொடை அளித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, வயநாட்டில் ஏற்பட்ட துரதிஷ்டவசமான உயிரிழப்புக்கு வருந்துகிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் கேரளாவுக்கு அதானி குழுமம் துணை நிற்கிறது. கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு எங்களது ஆதரவை வழங்குகிறோம். நிவாரண பாணிக்கு 5 கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்படும்,'' என்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!