பிரபல கிரிக்கெட் வீரர்... முன்னாள் கேப்டன் பூத் காலமானார்.. பிரபலங்கள் அஞ்சலி!

 
பிரையன் பூத்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் உயிரிழந்த செய்தி கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்  பிரையன் பூத். இவர் அந்த அணியின் 31ஆவது டெஸ்ட் கேப்டன் ஆவார்.

பிரையன் பூத் தனது 89 ஆவது வயதில் இன்று காலமானார் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இதனையடுத்து அவரது குடும்ப மரபுபடி அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதில் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 


பிரையன் பூத் ஆஸ்திரேலிய அணிக்காக ஐந்து டெஸ்ட்களில் சதங்களை அடித்துள்ளார். 1960-களின் முற்பகுதி முழுவதும் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசையில் முக்கிய வீரராக இருந்தார். மிடில்-ஆர்டர் பேட்டரான பூத், 1962 இல் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் சதம் அடித்தார். இவர் 1,773 டெஸ்ட் ரன்களை எடுத்தார். மேலும் 1956 மெல்போர்ன் ஒலிம்பிக்கில் ஹாக்கியிலும் ஆஸ்திரேலியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

பிரையன் பூத்

பிரையன் பூத் மறைவு குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி நிர்வாகம், முன்னாள் டெஸ்ட் கேப்டனான பிரையன் பூத் மறைவுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் இன்று இரங்கல் தெரிவித்துள்ளது. எங்கள் எண்ணங்கள் 89 வயதான அவரது குடும்பத்துடன் உள்ளன. அவர் மிகவும் விரும்பப்பட்ட மிடில் ஆர்டர் பேட்டராக மட்டுமல்லாமல், ஹாக்கியில் ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர். அவர் நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும், என்று பதிவிட்டிருந்தது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி! வீடியோ!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web