பகீர்... அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தை கடத்தல்... பொதுமக்கள் சாலை மறியல்!

 
திவ்யா


 
கள்ளக்குறிச்சி மாவட்டம்  அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையை கடத்திய இளம்பெண்ணுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி அருகே இந்திலி கிராமத்தில் வசித்து வருபவர்  சரவணன். இவரது மனைவி 23 திவ்யா.  இவர் 2வது பிரசவத்திற்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆகஸ்ட்  2ம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.   ஆகஸ்ட் 6ம் தேதி திவ்யாவிற்கு அறுவை சிகிச்சை மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்தது.  திவ்யா பச்சிளம் குழந்தைகள் வார்டில் உள்ள ஐசியு அறையில்  சிகிச்சை பெற்று வந்தார்.

குழந்தை பிரசவம்


அதே வார்டில் குழந்தையை அவரது தாய் காந்தி, மாமியார் தங்கமணி   வைத்திருந்தனர்.  இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 4.30 மணிக்கு  தங்கமணி தூங்கி கொண்டு இருந்தார். காந்திமதி கழிவறைக்கு சென்று விட்டு வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. கத்தி கூச்சலிட்டதில்  உடனடியாக அங்கிருந்தவர்கள் பச்சிளம் குழந்தையை தேடி வெளியே சென்றனர்.


அப்போது பெண் ஒருவர் கைக்குழந்தையை தூக்கிகொண்டு செல்வதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை தொடர்ந்தது.  அப்போது மந்தைவெளி பகுதியில் பச்சிளம் குழந்தையை கடத்தி சென்று மறைத்து வைத்திருந்த இளம்பெண்ணை மடக்கி பிடித்தனர். அந்த பெண்ணை அரசு மருத்துவமனை வளாகத்தில்  பொதுமக்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.   தாக்குதலில் படுகாயமடைந்த அந்த பெண்ணை போலீசார் கைது செய்து, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் பச்சிளங்குழந்தை கடத்தல் விவகாரத்தில், மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து 50க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.  

போலீஸ்


கைதான இளம்பெண் அளித்த வாக்குமூலத்தில்  அவர் சின்னசேலம் அருகில் உள்ள பாண்டியங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர். இவர் ராஜபாண்டியன் மனைவி லட்சுமி. இவர் முதல் கணவரை பிரிந்து இரண்டாவதாக ராஜபாண்டியனை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது  இதில் ராஜபாண்டியன் கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். 2வது திருமணமாகி 5 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இதனிடையே தான் கர்ப்பமாக இருப்பதாக கணவரிடம் லட்சுமி பொய் சொல்லிவிட்டார். அதனை உண்மையாக்க அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையை கடத்தி சென்று தனக்கு பிறந்ததாக கணவரிடம் தெரிவிக்க திட்டமிட்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.   

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?