கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல்.. கையும் களவுமாக சிக்கிய மாஜி அமைச்சரின் உதவியாளர்!
கஞ்சா விற்ற வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. கடந்த சில நாட்களாக கஞ்சா விற்பனையை தடுக்க தமிழக போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தப்படுகிறது. இதனால் கஞ்சா விற்பனையை தடுக்க தமிழக அரசு எல்லையில் தீவிர வேட்டை நடத்தி வருகிறது. தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், விநாயகர்கோயில் தெருவை சேர்ந்த தீபன்(எ) பார்த்திபன்(31), குணா(எ) சற்குணம்(28), சபரிகண்ணன்(22) ஆகிய 3 பேரும் பிடிபட்டது தெரிந்தது. அவர்களது பையை சோதனையிட்டபோது, அதில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது. இதனையடுத்து பிடிபட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜின் உதவியாளராக இருந்தவர் தீபன் (எ) பார்த்திபன். கும்பகோணம், வலங்கைமான், நீடாமங்கலம், நன்னிலம், குடவாசல் பகுதிகளுக்கு தீபன் மூலம் அதிக அளவில் கஞ்சா விநியோகம் செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் இருக்கும் தினேசும் , பார்த்தீபனும் நெருங்கிய நண்பர்கள். கஞ்சா விற்பனையிலும் இணைந்து செயல்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கஞ்சா விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் சமீபத்தில் போராட்டம் நடத்தினர். ஆனால் அதிமுக ஆட்சியில்தான் கஞ்சா விற்பனை அதிகமாக இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக அதிமுகவினர் சிலரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் கஞ்சா விற்பனை செய்ததாக அதிமுக அமைச்சரின் உதவியாளர் கைது செய்யப்பட்டிருப்பது திருவாரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
