கத்தியை காட்டி மிரட்டி தொடர் வழிப்பறி.. மூன்று கொள்ளையர்கள் அதிரடியாக கைது!

 
செல்வம், ராமச்சந்திரன், அறிவழகன்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை காவல் நிலையத்துக்குட்பட்ட சௌரியார்பட்டி பிரிவு சாலை, விராலிப்பட்டி பிரிவு சாலை, வளவம்பட்டி ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் நேற்று ஜோதிபாஸ்கர், முருகேசன், மகாலிங்கம் ஆகிய 3 பேரை கத்தி, அரிவாள் காட்டி மிரட்டி, நகை, பணம், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கந்தர்வகோட்டை, ஆதனகோட்டையில் நடந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் கொடுத்த புகாரின் பேரில் கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தனிப்படை அமைத்தார். அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வம், ராமச்சந்திரன், அறிவழகன் ஆகிய 3 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவத்தில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்து சிறையில் அடைத்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் பாராட்டு தெரிவித்தார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web